நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக கொண்டாடப்படுகிறது ஒவ்வொரு பகுதிகளையும் பல லட்ச ரூபாய் செலவழித்து விநாயகர் சிலை வைத்து வழிபடுவதும் உண்டு ஒரு அருகம் புல் வைத்து ஒரு ₹5 க்கு சிலை வாங்கி வழிபடுவதும் உண்டு நம் வழிபாடு மாறுபடுமே தவிர வழிபாடு அவரவர்கள் மனதிற்கு ஏற்றார் போல் உள்ளது.

அது போன்றுதான் இன்று மதுரை மாவட்டம் பழங்காநத்தம் மாடக்குளம் கிராமம் பெரியார் நகர் பகுதியில் அங்கே உள்ள படிக்கும் சிறுவர்கள் சிறிய விநாயகர் அளவிலான சிலையை தேர் வடிவில் வடிவமைத்து ஒவ்வொரு வீதியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாவிக்க செய்தனர்.

இது அப்பகுதி மக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது அப்பகுதி சிறுவர்கள் தோள்களில் விநாயகரே சிலையை தோள் மீது வைத்து வைத்து வீதி வீதியாக சென்றது.

அப்பகுதி பகுதி மக்கள் ஆச்சரியமாக பார்த்தனர் சிறுவர்களின் செயல்பாடு இன்றைய காலகட்டங்களில் செல்போனுக்கு அடிமையாக இருக்கும் இடையில் செயல்பாடு அனைவரையும் பாராட்டை பெற்றது.








