• Fri. Mar 29th, 2024

கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக இந்து மகாசபை தலைவர் கைது

ByA.Tamilselvan

Apr 23, 2022

கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக, இந்து மகா சபா தலைவர் பாலசுப்ரமணியம் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே உள்ள ஒரு கோவிலில் கடந்த சில தினங்களுக்கு முன் திருவிழா நடந்தது.. இதில், அகில பாரத இந்து மகா சபா மாநில தலைவர் பாலசுப்ரமணியம் கலந்து கொண்டார்.
கோயில் நிகழ்ச்சிகள் முடிவடைந்த நிலையில், பாலசுப்ரமணியம் நிர்வாகிகள், மற்றும் பக்தர்கள் இடையே உரையாற்றினார்.
அப்போது, கேரளா மாநிலத்தில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் பிரமுகர் படுகொலை சம்பவத்தை மேற்கோள் காட்டி இந்துக்களை பாதுகாப்பது நமது கடமை, கேரளாவில் ஒருவரை வெட்டினால் இன்னொருத்தரை வெட்டுவார்கள், தமிழகத்தில் ஒருத்தருக்கு பத்து பேர், அடியாத மாடு பணியாது” என்றெல்லாம் வன்மமாக பேசியிருந்தார்.. இந்த வீடியோ சோஷியல் மீடியாவிலும் வைரலானது. இந்த வீடியோவை பார்த்து பல தரப்பினரும் அதிர்ச்சி அடைந்தனர்..
இது தொடர்பாக புதுக்கடை காவல் நிலைய சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ரத்தினதாஸ் நாட்டின் அமைதிக்கு சீர்குலைப்பதாக புகார் அளித்தார்.. இந்த புகாரின் அடிப்படையில், பாலசுப்பிரமணியம் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த புதுக்கடை போலீசார் அவரை இன்று அதிகாலை ஈத்தாமொழியில் உள்ள அவரது வீட்டிற்குள் புகுந்து கைது செய்தனர்.
இந்நிலையில் இந்து மகா சபா மாநில தலைவருக்கு ஏற்பட்ட உடல்நலக்கோளரு காரணமாக சிகிச்சைக்காக குழித்துறை மருத்துவமனைக்கு போலீசாரால் அழைத்து வரப்பட்டார். அவரது தொண்டர்கள் மருத்துவமனையை திடீரென முற்றுகையிட்டு ஆர்பாட்டம் நடத்தினர். தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து அவர்களை சமாதானப்படுத்தினர்.. பிறகு, பாலசுப்பிரமணியத்தை, போலீசார் குழித்துறை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் .மேலும்அவருரை சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *