• Thu. Apr 18th, 2024

இந்தி மொழி இந்தியாவின் தேசிய மொழியா..?? மக்களிடம் கருத்து கேட்க வேண்டும்-மம்தா

Byகாயத்ரி

Apr 29, 2022

நடைபெற்று முடிந்த பாராளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-வது கூட்டத்தில் தலைமை வகித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாட்டில் அலுவல் மொழியாக ஆங்கிலத்திற்கு பதில் இந்தி மொழிதான் இருக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இது தமிழகம் உள்பட இந்தி மொழி பேசாத மாநிலங்களில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் அமித்ஷாவின் இந்தி மொழி குறித்த கருத்திற்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பதில் அளித்துள்ளார். அம்மாநில தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களின் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த அவர், இந்தி மொழி குறித்து கூட்டாக முடிவெடுப்பதற்காக எதிர்க்கட்சிகளின் முதலமைச்சர்களுடன் விவாதிக்க உள்ளதாக கூறினார். எங்கள் நாடு பல்வேறு மொழிகள் மற்றும் தாய்மொழிகளைக் கொண்ட ஒரு பரந்த நாடு என்றும், இந்தி மொழி குறித்து நான் எதுவும் சொல்லப் போவதில்லை, ஏனென்றால் நான் மற்ற முதல்வர்களுடன் விவாதிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்தி மொழி இந்தியாவின் தேசிய மொழியா என்பது குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்க வேண்டும் என்றும் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.இந்நிலையில் தேசிய மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று டெல்லி செல்லும் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடியை சந்திக்க மாட்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *