• Tue. Sep 17th, 2024

இந்தியாவில் தமிழ்தான் இணைப்பு மொழி- இயக்குனர் பா.ரஞ்சித்

Byகாயத்ரி

Apr 29, 2022

சமீப காலமாக திரையுலகில் இந்தி தேசிய மொழியா என்ற சர்ச்சை எழுந்துள்ள நிலையில் தற்போது இயக்குனர் பா.ரஞ்சித் இதுகுறித்து பேசியுள்ளார்.

கடந்த சில நாட்களாக திரை பிரபலங்கள் இடையே எழுந்துள்ள இந்தி குறித்த கருத்துகள் வைரலாகி வருகின்றன. சமீபத்தில் கன்னட நடிகர் கிச்சா சுதீப் இந்தி பற்றி பதிவிட்டதற்கு, கேள்வி எழுப்பி பதிவிட்ட இந்தி நடிகர் அஜய் தேவ்கன், இந்திதான் இந்தியாவின் தேசிய மொழி என கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.தொடர்ந்து அதற்கு கிச்சா சுதீப் பதிலளித்த நிலையில் அஜய் தேவ்கனின் அந்த ட்விட்டர் பதிவில் பலரும் சென்று கடுமையான விமர்சனங்களை வைத்து வந்தனர். அதை தொடர்ந்து தன்னுடைய பதிவு தவறாக மொழிபெயர்க்கப்பட்டதாக அஜய் தேவ்கன் விளக்கமளித்து பதிவிட்டார். இந்நிலையில் இந்த இந்தி விவகாரம் குறித்து பேசியுள்ள தமிழ் திரைப்பட இயக்குனரும், தலித்திய செயற்பாட்டளருமான பா.ரஞ்சித் “இந்தியை எப்போதும் ஏற்க மாட்டோம். இந்தியாவில் ஆதிக்க மொழியாக இருக்கிறது. தென் இந்தியர்களை விட வட இந்தியர்கள் உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் உள்ளது. இந்தியாவில் தமிழ்தான் இணைப்பு மொழியாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *