தமிழகத்தில் தற்போதுமிக கவலைக்குறிய பிரச்சனையாக மாணவர்களின் ஒழுக்கமின்மை பார்க்கப்படுகிறது. தனக்கு கல்வி கற்றுத்தரும் ஆசிரியர்களை அடிக்க பாய்வதும், மாணவர்கள் அவர்களுக்குள் மோதலில் ஈடுபடுவதும், போதைகளுக்கு அடிமையாவதும்
ஆசிரியர்கள்,பொற்றோர்களுக்க பெரும் சிக்கலை உருவாக்கியுள்ளது.குறிப்பாக இந்தபிரச்சனை கொரோனா காலத்திற்கு பின்பு இச்சம்பவங்கள் அதிகரித்திருப்பதாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில்‘மூர்க்கமாக நடக்கும் மாணவர்களை ஆசிரியர்கள்தான் இரண்டாவது தாயாகி திருத்த வேண்டும்’ என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். அதற்கான சூழலை அரசுப் பள்ளிகளில் உருவாக்கித் தர வேண்டியது நம் அனைவரின் பொறுப்பும் கடமையும் ஆகும் என்றார்.அமைச்சரின் பேச்சு அரசு பள்ளி மாணவர்களின் தற்போதைய நிலையை உணர்த்துவதாக உள்ளது.
தனியார் பள்ளிகளில் சரியில்லாத மாணவர்களின் பெற்றோர்கள் வரவழைக்கப்பட்டு ஒழுக்கமாக இருந்தால் படிக்கலாம் இல்லையெனில் மாற்றுச் சான்றிதழ் பெற்று சென்றுவிடலாம் என ஒரு வரியில் முடித்து விடுவார்கள் அரசுப்பள்ளியில் நீங்கள் எந்த மாணவனையும் அப்படி கூறமுடியாது.
குடும்ப,சமூக,உடல், மனம் சார்ந்த பாதிப்பிற்குள்ளான மாணவர்களின் எண்ணிக்கை அதிகம் .எந்த ஒரு மாணவனையும் பள்ளிக்குள் கொண்டுவந்து திருத்துவதற்கான கடமை அரசுப் பள்ளிகளுக்கே உள்ளது.பள்ளி, பாடத்திட்டத்தில் செய்ய வேண்டிய மாற்றங்கள் கொண்டுவரவேண்டும். அதை விடுத்துமாணவர் எதிர்ப்பு கோசம் எந்த வகையிலும் பயன்தராது.சுதந்திரம் என்ற பெயரில் மாணவர்கள் செய்பவைகள் எவ்வளவு பெரிய ஒழுங்கீனம் என்பதை மாணவர்களுக்கு உணர வைக்க வேண்டும்.தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் ஜுனியர் ரெட்கிராஸ் உயர்நிலை , மேனிலைப்பள்ளிகளில் என்.எஸ்.எஸ்,என்.சி.சி போன்ற அமைப்புகள் பெயரளவில் இல்லாமல் கட்டாயமாக்கப்பட வேண்டும்.
மரம் நடுவது,கிராமங்களில் உள்ள கோயில்கள் மற்றும் முக்கிய தளங்களை தூய்மைப்படுத்துவது உள்ளிட்ட சமூகம் சார்ந்த செயல்பாடுகளில் மாதமொரு நாள் மாணவர்களை ஈடுபட செய்ய வேண்டும்.
நீதி நெறிக்கென தனி பாடப்புத்தகமும்,வகுப்புகளும் வகுக்கப்பட்டு அதற்கு பெயரளவில் மதிப்பெண் தராமல் மதிப்பெண் பட்டியலில் மொத்த மதிப்பெண்ணோடு சேர்த்து வருமாறு செய்யவேண்டும்.அந்த பாடத்திற்கு அறிவியல் செய்முறை மதிப்பெண் போல அப்பாடத்திற்கு சமூகபங்களிப்பு ,நன்னடத்தை மதிப்பெண் தரவேண்டும்
அந்த பொறுப்பை வகுப்பாசிரியருக்கு தரவேண்டும்.நீதிநெறி பாடத்தில் பெரும் மதிப்பெண் மூலமாக மேற்படிப்பு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை போன்றவைகள் வழங்கவேண்டும்.
தண்டனைகளும் ,பயமுறுத்தல்களும் பள்ளியில் இடைநிற்றலை அதிகரிக்கும் மேலும் இன்னும் சமூகத்தில் ஒழுங்கீனங்கள் அதிகமாகுமே தவிர வேறுஎந்த முன்னேற்றமும் ஏற்படாது.