• Fri. Apr 26th, 2024

இமயமலை சாமியாருக்கும் சித்ரா ராமகிருஷ்ணனுக்கும் சிக்கு புக்கு சிக்கு புக்கு ..

சித்ரா ராமகிருஷ்ணன் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை செய்து வருகின்றனர். தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணன் ஆகும்.

சாமியாரின் ஆலோசனையின்பேரில் பங்குச் சந்தையை நடத்தியதாக சர்ச்சை வெளியான நிலையில் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. இவர் சாமியார் ஒருவரிடம் பங்குச் சந்தை விவரங்களை பகிர்ந்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது. ஆனந்த் சுப்பிரமணியத்தை விதிகளை மீறி இவர் தலைமை செயல்பாட்டு அதிகாரியாக நியமனம் செய்ததாகவும் புகார் உள்ளது. அவருக்கு சொந்தமான வீடு, அலுவலகம், உறவினர் வீடுகளில் சோதனைகள் நடைபெற்று வருகின்றன.

சமீபத்தில் இந்திய பங்குச்சந்தைகளின் ஒழுங்காற்று அமைப்பான செபி இவருக்கு எதிரான புகார்களை அடுக்கி உள்ளது. தேசிய பங்கு சந்தையின் தலைமை செயலதிகாரியாக சித்ரா ராமகிருஷ்ணா பங்கு சந்தை தகவல்களை இமய மலையில் இருந்த சாமியார் ஒருவரிடம் பகிர்ந்து உள்ளார். அதேபோல் அந்த சாமியார் கொடுத்த அறிவுரைகளை பின்பற்றி பல்வேறு முடிவுகளை எடுத்துள்ளார். பல்வேறு ரகசியங்களை இவர் அந்த சாமியாருக்கு பகிர்ந்ததாக புகார் வைக்கப்பட்டுள்ளது.

இதில் செபி வைத்திருக்கும் முக்கிய குற்றச்சாட்டு என்றால், அந்த சாமியாரின் சொல் பேச்சை அப்படியே கேட்டு சித்ரா செயல்பட்டு இருக்கிறார். சாமியாரின் தலையாட்டி பொம்மை போல சித்ரா செயல்பட்டதாகவும், சித்ரா சிஇஓ போல இல்லை. அந்த சாமியார்தான் சிஇஓ போல செயல்பட்டார் என்றும் செபி கூறியுள்ளது. 2016ல் பதவியில் இருந்து விளக்குவதற்கு முன்பு வரை சித்ரா ராமகிருஷ்ணா இது போன்ற தகவல்களை பகிர்ந்து வந்ததாக புகார் எழுந்துள்ளது.

20 வருடமாக அண்ட் சாமியாருடன் சித்ரா தொடர்பில் இருந்து இருக்கிறார். இவர் சிஇஓவாக இருந்த காலகட்டத்தில் அனைத்து தகவல்களையும் பகிர்ந்து உள்ளார். முக்கியமாக பங்கு சந்தை இன்று எப்படி இருக்கும் என்ற கணிப்புகள், என்எஸ்இ இன்று செய்ய போகும் பணிகள் என்ன, எதிர்கால திட்டங்கள் என்ன என்று பல விஷயங்களை சித்ரா ராமகிருஷ்ணா அந்த சாமியாரிடம் பகிர்ந்து இருக்கிறார். இதையடுத்து அவருக்கு 3 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் 3 வருடம் என்எஸ்இ தொடர்பான எந்த பணிகளிலும் ஈடுபட அவருக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அபராதம் விதிப்பது மட்டும் அல்லாமல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த இமயமலை சாமியார் யார் என்று தெரியாத நிலையில் இன்று ஐடி ரெய்டில் அந்த சாமியார் யார் என்பது குறித்த விசாரணைகள் நடக்கும் என்று கூறப்படுகிறது. அந்த சாமியாரின் பெயர் சிரோன்மணி என்று மட்டும் தெரிந்துள்ளது.

ஆனால் இதுவும் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. சிரோன்மணியின் பேச்சை கேட்டு இவர் பலருக்கு பதவி வழங்கியதாகவும், பலருக்கு அதிக சம்பளம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. ஆனந்த் சுப்பிரமணியத்தை விதிகளை மீறி இவர் தலைமை செயல்பாட்டு அதிகாரியாக நியமனம் செய்ததாகவும் புகார் உள்ளது. அவருக்கு கூடுதல் சம்பளம் கொடுப்பதாக என்எஸ்இக்கு கணக்கு காட்டி பொய் சொல்லி பணத்தை மோசடி செய்ததாகவும் இன்னொரு புகாரும் வைக்கப்பட்டு உள்ளது. ஆனந்த் சுப்பிரமணியத்திற்கு வருட சம்பளம் 5 கோடி வரை உயர்த்தப்பட சாமியார் சிரோன்மணியின் உத்தரவுதான் காரணம். அந்த சாமியார் பேச்சை கேட்டு இப்படி பலருக்கு சித்ரா சம்பள உயர்வு கொடுத்ததாகவும் புகார் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *