• Wed. May 8th, 2024

ஹிஜாப் வழக்கு – கர்நாடகா அரசுக்கு நோட்டீஸ்

ByA.Tamilselvan

Aug 29, 2022

ஹிஜாப் வழக்கு விவகாரம் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் கர்நாடக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் எனப்படும் மத அடையாள ஆடைகளை அணிந்து செல்வதற்கு மாநில அரசு தடை விதித்தது. இந்த தடையை கர்நாடகா உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. மாநிலத்தின் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுத்த கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் இன்று நீதிபதிகள் ஹேமந்த் குப்தா மற்றும் சுதன்ஷு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பதில் அளிக்கக் கோரி கர்நாடகா அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை செப்டம்பர் 5ஆம் தேதி நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *