• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

கேரளாவில் பெரும் நிலச்சரிவு 3 பேர் பலி!!!-வீடியோ

ByA.Tamilselvan

Aug 29, 2022

கேரளாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் ஓரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியாகி உள்ளனர்.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை காரணமாக பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.இதனால் மலை கிராமங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் கனமழை காரணமாக இடுக்கி மாவட்டம் தொடுபுழா தாலுகாவில் உள்ள குடையாத்தூர் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவால் வீடு ஒன்று, மண்ணில் புதைந்தது. இதுகுறித்து தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் மற்றும் மீட்புபடையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். நீண்ட தேடுதலுக்கு பிறகு இன்று அதிகாலை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. தொடர்ந்து தேடும் பணியில் மீட்புபடையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.