• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

காற்று மாசு புகார் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

ஈரோடு மரப்பாலம் அடுத்த சீனியன் தோட்டம் பகுதியில் காற்று மாசு புகார் மீது கலெக்டர் மற்றும் மாநகராட்சி ஆணையர் உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டார் .உத்தரவை செயல்படுத்த கோரி கலெக்டரிடம மனு அளிக்கப்பட்டது.
அப்பகுதி சேர்ந்த ரமேஷ் கூறியதாவது தங்களது பகுதி குடியிருப்பு பகுதியாகும் ஆனால் சமீபத்தில் இரண்டு ஜவுளி நிறுவனங்கள் -பழனியப்பா டெக்ஸ்டைல்ஸ் மற்றும் சத்குரு டெக்ஸ்டைல்ஸ் -காடாதுணிகளை கொண்டு வந்து அதை தரம் பிரித்து அனுப்பம் பணியில் ஈடுபடுகின்றன இதனால் ஏராளமான வாகனங்கள் வந்து சாலைகள் சேதம் அடைந்தன தண்ணீர் காற்று மற்றும் ஒலி மாசு ஏற்படுகிறது.அப்பகுதி குடியிருப்பு வாசிகள் ஆஸ்துமா உட்பட பல்வேறு நோய்களால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இது சம்பந்தமாக கலெக்டர் மற்றும் மாநகராட்சி ஆணையரிடம் கடந்த 2017 இல் பல மனுக்கள் தரப்பட்டு எந்த நடவடிக்கையும்எடுக்கப்படவில்லை. அதனால் கடந்தாண்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது .நீதிபதி தனது உத்தரவில் கலெக்டர் மற்றும் மாநகராட்சி ஆணையர் புகார்தாரரின் மனுவை விசாரித்து சட்டத்தின்படியும், தகுதியின் அடிப்படையி லும்உரிய நடவடிக்கை எடுக்கவும் மனுதாரரையும் எதிர்மனுதாரர்கள் ஆன ராஜேந்திர கோத்தாரி, ஏ பி சீனிவாசனையும் விசாரிக்கவும் ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டுமான விதிகள் 2019 ன் படி துரிதமாக நடவடிக்கை எடுக்கவும் ஆணையிட்டார்.
எனவே இந்த ஆணையை அமல்படுத்தக்கோரி இன்று கலெக்டர் இடம் மனு அளிக்கப்பட்டது.மனுவில் அப்பகுதி குடியிருப்பு பகுதியாகும் இனிமேல் சட்ட விரோதமாக ஜவுளி குடோன்கள் குடியிருப்புகளில் செயல்படுவதை தடுக்க வேண்டும். இந்த இரண்டு நிறுவனங்களை தொடர்ந்து பல புதிய நிறுவனங்களும் அப்பகுதியில் செயல்பட துவங்கியுள்ளன .அங்கிருந்து இந்த மாசு ஏற்படுத்தும் குடோன்கள் மற்றும் தொழிற்சாலைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்பது எங்களுக்கு கோரிக்கையாகும் இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என கூறினார்.