தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களை இணைக்கும் வகையில் கொடைக்கானல், ராமேசுவரத்தில் விரைவில் ஹெலிகாப்டர் தளம் அமைப்பது குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு மேற்கொண்டார்.
இதுகுறித்து தமிழ்நாடு சுற்றுலாத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
சுற்றுலாத்துறையின் திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பான ஆய்வு கூட்டம் சென்னையில் சுற்றுலாத்துறை தலைமை அலுவலகத்தில் அமைச்சர் மதிவேந்தன் தலைமையில் நடந்தது.
இந்த கூட்டத்தில், தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களை இணைக்கும் வகையில் கொடைக்கானல், ராமேசுவரம் ஆகிய இடங்களில் ஹெலிகாப்டர் சுற்றுலா தொடங்குவதற்காக ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்க நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியின் அழகை இரவிலும் ரசிக்க லேசர் உதவியுடன் ஒளியூட்டம் செய்ய முயற்சிகள், ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் பார்வையாளர் மாடம், முதலியார்குப்பம் படகு குழாம் அருகில் ஓடியூர் ஏரியில் அமைந்துள்ள தீவுப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் படகில் செல்வதில் அதிக ஆர்வம் காட்டி வருவதால் இங்கு ரூ.50 லட்சம் மதிப்பில் நீர் விளையாட்டுகள், கடற்கரை விளையாட்டுகள், தேநீர் விடுதி போன்ற வசதிகளை செய்வதற்கு அரசிடம் நிதி கோரப்பட்டுள்ளது.
உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகள் அதிகளவில் ஈர்த்துள்ள, பிச்சாவரம் அலையாத்தி காடுகளை மேம்படுத்த, இங்கு பூங்கா, திறந்தவெளி முகாம், காட்சி கோபுரம், படகு குழாம், தங்கும் அறைகள், உணவகம் போன்றவற்றை அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த கூட்டத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றம் அறநிலையங்கள் துறை முதன்மை செயலாளர் டாக்டர் பி.சந்திரமோகன், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக மேலாண்மை இயக்குனர் சந்தீப் நந்தூரி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- அதிமுகவை அழிக்க நினைத்தால் அழிந்து போவீர்கள், பிள்ளை பிடிக்கும் வேலையை இத்தோடு விட்டுவிட வேண்டும் – ஆர்.பி.உதயக்குமார் தாக்கு.,
- மாணவர் அமுதன் உயிரிழப்பு விவகாரத்தில் உண்மைத் தன்மையைக் கண்டறிய வேண்டும்..,
- கோவையில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் – முன்னாள் அமைச்சர்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு…
- மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஆசிரியர்கள் மாணவர்கள் பாதிக்கப்படுவதாக ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு..,
- பயிர் கடன்கள் முழுவதையும் தள்ளுபடி செய்யாத தவெக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..,
- புனித அன்னாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா..,
- ஏழாயிரம் பண்ணையில் ஆசிரியர் ஜேசுராஜா நினைவாக மினி மாரத்தான் போட்டி..,
- கோவையில் ஆன்மீக சொற்பொழிவு மற்றும் தியான நிகழ்ச்சி..,
- தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்..,
- ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர விழா…





