• Fri. Apr 26th, 2024

கனமழை எதிரொலி: 5 மாவட்டங்களில்
பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

கன மழை காரணமாக 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் கரையை கடந்த நிலையில், வட மற்றும் உள் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி தமிழகத்தில் பல்வேறு மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் கன மழை காரணமாக 5 மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், செங்கல்பட்டு,
காஞ்சிபுரம், விழுப்புரம் , கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *