
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தது.

இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று லேசான சாரல் மழை பெய்தது. இதனால் இன்று காலை முதல் வானிலை மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
அதனை தொடர்ந்து சுமார் இரண்டு மணி நேரமாக கன மழை கொட்டியது. பின்னர் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. சாத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள இருக்கன்குடி, மேட்டுப்பட்டி, கொல்லபட்டி, சூரங்குடி, அமீர்பாளையம், மேட்டமலை, படந்தால் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.
இதனால் சாத்தூர் பைபாஸ் மற்றும் மெயின்ரோடு சாலையோரங்களில் மழை நீர் தேங்கி ஏரி குளம் போல் காட்சியளிக்கிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்க்கு பெரும் இடையூறாகவும் சிரமத்தை ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது.
