• Tue. Mar 3rd, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

உதகையில் இடியுடன் கூடிய கனமழை

உதகை மற்றும் அது சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது. அதிகபட்சமாக பந்தலூரில் 21 மி.மீ மழையும், உலிக்கல் பகுதியில் 15 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.
உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் வெயில் அடித்து வந்த நிலையில் பிற்பகல் முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
இதனை அடுத்து இரவு இடி மின்னலுடன் கூடிய தொடர் மழை பெய்தது. சில இடங்களில் பரவலான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்தது. கனமழையின் காரணமாக கடும் குளிர் வாட்டியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
உதகை மாவட்டத்தில் அதிகபட்சமாக பந்தலூர் பகுதியில் 21 மி.மீ மழையும், உலிக்கல் மற்றும் கின்னக்கொரை15 மி.மீ, பர்லியார் 14 மி.மீ, கெத்தை 16 மி.மீ, உதகை 6 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக 155 மில்லி மீட்டர் மழையும் சராசரியாக 5.34 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.