நீலகிரி மாவட்டம் குந்தா கிழக்கு ஒன்றியத்தின் சார்பாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பஜார் மாரியம்மன் திடலில் குந்தா கிழக்கு ஒன்றியத்தின் சார்பாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆறாம் ஆண்டு நினைவு நாள் குந்தா கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் வசந்தராஜன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கீழ்குந்தா பேரூராட்சி கழக செயலாளர் சிவராஜ், பாசறை ஒன்றிய செயலாளர் ஜெயபிரகாஷ் மாவட்ட பிரதிநிதி சுரேஷ் பேரூராட்சி அவைத்தலைவர் துரைசாமி ஐ.டி.வின்ங்,மட்டக்கண்டி சரவணன், சாய் கிரிஷ் மூர்த்தி, கீழ்குந்தா கோபாலன், கரியமலை விசு, ஓணிக்கண்டி மணி, குந்தா சிவராமன், மற்றும் கழக நிர்வாகிகளும்.கட்சித் தொண்டர்களும் ஏராளமானோர் கலந்து கொண்டு ஜெ ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
இதில் மகளிர் அணி சார்ந்த நிர்வாகிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டனர். அதிமுக குந்தா கிழக்கு ஒன்றியத்தின் சார்பாக பேரூராட்சி செயலாளர் சிவராஜ் தலைமையில் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் தொண்டர்களும் முதியவர்களும் கலந்து கொண்டனர், சில முதியவர்களின் கண்களில் கண்ணீர் வடிந்தவாறு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.