தமிழகத்தில் தற்போது மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கோவை,நீலகிரி மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.மேலும் தேனி, திண்டுக்கல்,தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யலாம் எனவும். நாளை நீலகிரி ,கோவை ,தேனி,திண்டுக்கல் ,தென்காசி ,ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது. சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மழைபெய்யக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.