• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சீனாவில் கொட்டும் கனமழை!..

சீனாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள ஷாங்க்சி மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. இடைவிடாமல் பெய்யும் மழையால் அங்குள்ள சுமார் 80 நகரங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சாலைகளில் வெள்ளம் ஆறாக ஓடுகிறது. 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி சேதம் அடைந்துள்ளன.

இந்நிலையில், தொடர் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக ஷாங்க்சி மாகாணத்தில் இருந்து சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். ஹீபெய் மாகாணத்தில் பெய்த பலத்த மழையால் சிஜியாஜுவாங் என்ற நகரிலுள்ள ஆற்றை பாலத்தில் கடக்க முயன்ற ஒரு பேருந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதில் 2 பேர் பலியாகினர்.
இதனால் அங்குள்ள மக்கள் உணவு, தங்குமிடம் இன்றி தவித்து வருகின்றனர்.