• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மதுரையில் பலத்த மழை

ByN.Ravi

May 16, 2024

பலத்த மழை அரசு பஸ்கள் குற்றால அருவி போல மழை நீர் பங்குகள் பயணிகள் தலையில் கொட்டுகிறது. மதுரை மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து, மழை பெய்து வருகிறது.
பகல் பொழுது வெப்பம் ஏற்பட்டாலும், அதை தணிக்கும் வகையில், மதுரை மாவட்டத்தில், குளிர்ந்த மழை பெய்து வருகிறது. மதுரை நகர், சோழவந்தான், வாடிப்பட்டி, சமயநல்லூர், திருமங்கலம், மேலூர், கல்லுப்பட்டி, வரிசூர், பூவந்தி, கொடைரோடு, அம்மைய நாயக்கனூர், திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை, வத்தலகுண்டு ஆகிய பகுதிகளில் தினசரி மாலை நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், சாலையோரம் மரங்கள் சாலையில் சாய்கின்றன. மதுரை நகரில் மாநகராட்சியில் தோண்டப்பட்ட குழிகளில் ,மழை நீர் தேங்கி போக்குவரத்துக்கும், பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படுகிறது.
மதுரை அண்ணா நகர், தாசில்தார் நகர் மருதுபாண்டியர் தெரு, சித்தி விநாயகர் கோவில் தெரு ஆகிய தெருக்களில் மழை நீர் குளம் போல, தேங்கியுள்ளன. இதனால், பொதுமக்கள் இரவு நேரங்களில் செல்வதற்கு அஞ்சுகின்றனர். மதுரை மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், மழை நீரை தேங்கியுள்ளதை அகற்ற அதிகாரிகள் ஆர்வம் காட்டியுள்ள என, கூறப்படுகிறது. மாநகராட்சி மேயர், ஆணையாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இப்பதி மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
சோழவந்தான் பலத்த மழையால், திருவேடகம் பகுதியில் மரங்கள் சாய்ந்தன.