வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தென்காசி, திருப்பத்துார், திருச்சி, வேலுார் ஆகிய மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அரியலுார், பெரம்பலுார், கடலுார், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை கன மழை பெய்யக்கூடும் என்றும் வரும் 29ம் தேதி வரை தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.