தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் காலை முதல் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் சுமார் ஒரு மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது. வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைத்துள்ளனர். அருவிகளில் குளிக்க தடை இருப்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைந்த அளவே உள்ளது.
