- மழை நிலவரத்தை தீவிரமாக கண்காணிக்க கலெக்டர்களுக்கு CM ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
- 6 மாவட்ட ஆட்சியர்கள், அமைச்சர் ஆவடி நாசர் உள்ளிட்டோருடன் காணொலி மூலம் CM ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
- அப்போது, 2 நாள்கள் கனமழை பெய்யவுள்ளதால் இரவு முழுவதும் தீவிரமாக கண்காணிக்க ஆட்சியர்களை CM ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
- கடலோரம், தாழ்வான பகுதிகளில் வசிப்போரை அரசு முகாம்களில் தங்க வைக்கவும் CM ஸ்டாலின் ஆணையிட்டார்.