• Thu. Mar 28th, 2024

குடும்பத் தலைவிகளுக்கு செப்டம்பர் முதல் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் -அமைச்சர் மூர்த்தி பேச்சு

ByKalamegam Viswanathan

May 7, 2023

தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு வருகின்ற செப்டம்பர் முதல் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்
மதுரை வாடிப்பட்டியில் நலத்திட்ட உதவிகள் வழங்கி அமைச்சர் மூர்த்தி பேச்சு
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் சோழவந்தான் தொகுதி சார்பாக திமுக அரசின் ஈராண்டு சாதனை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது இந்த நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு பத்திரப்பதிவு மற்றும் வணிகவரியத் துறை அமைச்சர் மூர்த்தி பேசும்போது
ஏற்கனவே இருந்த அதிமுக அரசு 6 லட்சம் கோடி கடனை தமிழகத்திற்கு விட்டு சென்றது அதனை சரி செய்யும் பணிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளாக முதல்வர் ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறார்
இந்த நெருக்கடியிலும் வருகின்ற செப்டம்பர் முதல் தகுதி உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் அதற்கான சட்ட மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது ஆகையால் உறுதியாக செப்டம்பர் முதல் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் . இளைஞர் நலன் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி மாவட்டம் தோறும் ஆய்வுப் பணிகளை செய்து வருகிறார் மதுரைக்கு கூடிய விரைவில் ஆய்வு பணிக்காக வர உள்ளார் மேலும் மகளிர் சுய உதவி குழுக்களுக்காண புதிய கடன்களை வழங்கி இருக்கிறார். இந்த ஆண்டு மட்டும் 72 ஆயிரம் குடும்பங்களுக்கு 188 கோடி ரூபாய் மகளிர் சுய உதவி குழு மூலம் கடன்கள் வழங்கப்பட்டுள்ளது அதிலும் மகளிர் சுய உதவி குழுக்களுக்காக 35 ஆயிரம் கோடியும் விவசாயத்திற்காக 40 ஆயிரம் கோடி ரூபாயும் தமிழக அரசு ஒதுக்கி உள்ளது இன்று மட்டும் வாடிப்பட்டியில் 54 லட்சத்தி 57 ஆயிரம் ரூபாய் அளவுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது தமிழகம் அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடி மாநிலமாக இந்த இரண்டு ஆண்டுகளில் எல்லா துறைகளிலும் சிறந்து விளங்குகிறது இதற்கு காரணம் முதல்வரின் கடின உழைப்பு தான்.


தேர்தல் வாக்குறுதியில் நாங்கள் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றியும் சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருகிறோம் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் உயர்கல்வி படிப்பதற்காக மாதந்தோறும் கல்வி உதவித்தொகை ரூபாய் 1000 வழங்கப்பட்டு வருகிறது அதேபோல் இல்லத்தரசிகளின் சிரமத்தை போக்கும் வகையில் பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது இது இந்தியாவின் முன்மாதிரி திட்டமாக தமிழகத்தில் மட்டுமே செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று கூறினார்இந்த நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அனீஷ் சேகர் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *