• Mon. Apr 28th, 2025

தலை கவச விழிப்புணர்வு பேரணி., ஆட்சியர் ஸ்ரீகாந்த் துவக்கம்..,

ByM.JEEVANANTHAM

Apr 15, 2025

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலை கவச விழிப்புணர்வு இரு சக்கர பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

இந்த விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முதல் மயிலாடுதுறை முக்கிய வீதிகள் வழியாக சென்று, தலைகவசம் அணிவதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு முழக்கங்களை எழும்பினர். இந்த விழிப்புணர்வு பேரணியில் மயிலாடுதுறை வட்டார போக்கு வரத்து ஆய்வாளர் இராம்குமார். வட்டார போக்குவரத்து அலுவலர் கதிர்வேல் மற்றும் 100 – க்கு மேற்பட்ட இரு சக்கர வாகனத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பேரணியை சிறப்பித்தனர்.