• Fri. Mar 20th, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

கேப்டன் விஜயகாந்த் பற்றி வெளியான மகிழ்ச்சியான செய்தி!

தேமுதிக தலைவா் விஜயகாந்த் துபாய் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து இன்று அதிகாலை 2.30 மணிக்கு எமரேட்ஸ் ஏா்லைன்ஸ் விமானத்தில் சென்னை திரும்பினாா்.

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் தான் கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளை கூட அவர் தவிர்த்து வந்தார். கடைசியாக நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் டிடிவி தினகரனின் அமமுக கட்சியுடன் தேமுதிக கூட்டணி அமைத்தது. இதற்கான தேர்தல் பிரசாரத்தில் விஜயகாந்த் பங்கேற்ற போதும், எந்த கூட்டத்திலும் உரையாற்றவில்லை.

இந்நிலையில், மருத்துவ சிகிச்சைக்காக கடந்த மாதம் 30 ஆம் தேதி காலை விமானத்தில் துபாய் சென்றாா். அவருடன் இளைய மகன் சண்முக பாண்டியன் மற்றும் 2 உதவியாளா்கள் சென்றனா். அவருக்கு துபாயில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சையை லண்டன் டாக்டா் ஒருவா் வந்து அளிப்பதாக கூறப்பட்டது. இதற்கிடையே விஜயகாந்த் மனைவி பிரேமலதா விஜயகாந்த் இம்மாதம் 3 ஆம் தேதி அதிகாலை விமானத்தில் துபாய் சென்றாா்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விஜயகாந்த் குணமடைந்து நல்ல நிலையில் மருந்துவமனையில் டிவி பாா்த்து கொண்டிருப்பது போலவும், அவா் அருகே அவருக்கு சிகிச்சை அளிக்கும் செவிலியா்கள் அமா்ந்திருப்பதுபோலவும் புகைப்படம் வெளியானது.

இந்த நிலையில் விஜயகாந்த் மனைவி பிரேமலதாவுடன் இன்று அதிகாலை 2.30 மணிக்கு துபாயிலிருந்து வரும் எமரேட்ஸ் ஏா்லைன்ஸ் விமானத்தில் சென்னை வந்தாா்.அதன்பின்பு காா் மூலம் வீட்டிற்கு புறப்பட்டு சென்றாா்