மதுரை நகரத்தில் வடக்கு மாவட்ட திமுக சார்பில் பதவிகள் விற்பனைக்கு உள்ளது என போஸ்டர் மூலம் ஒட்டப்பட்டு அந்தந்த பதவிக்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், பதவிக்கான தகுதியில் குண்டாஸ் பெற்றவராக இருக்க வேண்டும் என கூறப்பட்டது.
இதனையடுத்து மாவட்ட இளைஞரணி பொறுப்பிற்கு 5 லட்ச ரூபாயும், மாவட்ட பகுதி செயலாளருக்கு 3 லட்ச ரூபாயும், மாநகர் வடக்கு மாவட்ட பிரதிநிதி பொறுப்பிற்கு 3 லட்ச ரூபாயும், வடக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பிற்கு இரண்டரை லட்ச ரூபாய் கட்டவேண்டும் என அச்சிடப்பட்டு இருந்ததாக தெரிவித்தனர்.
இந்நிலையில் பணம் இருந்தால் மட்டுமே பதவி உண்டு எனவும் அந்த பகுதியை சேர்ந்தவர்களாக இருக்க அவசியமில்லை தெரிவித்தனர் . மேலும் கட்சியில் உழைத்தவனுக்கு ஒன்றுமில்லை பணம் இருந்தால் கட்டாயம் பதவி கிடைக்கும் என வேதனையுடன் தெரிவித்தனர்.