நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் நாளை (2ம்தேதி) அனுமன் ஜெயந்தி விழா நடைபெறுகிறது.
இதையொட்டி ஆஞ்சநேயருக்கு அன்று அதிகாலை 1 லட்சத்து 8 வடை மாலை சாத்தப்படுகிறது. இதற்காக வடை தயாரிக்கும் பணி, ஆஞ்சநேயர் கோயில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் கடந்த 4 தினங்களுக்கு முன் தொடங்கியது. இந்த பணியில் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த சமையல் கலைஞர்கள் 32 பேர் ஈடுபட்டனர். நேற்று மாலை, வடை தயாரிக்கும் பணி நிறைவடைந்தது.இதனையடுத்து, நேற்று மாலை முதல் வடை மாலை கோர்க்கும் பணி துவங்கியுள்ளது. 1008 வடைகள் ஒரு மாலையாக கோர்க்கப்படுகிறது. மொத்தம் 24 மாலைகள் கோர்க்கப்பட்டு, நாளை (2ம் தேதி) அதிகாலை 4 மணிக்கு, ஆஞ்சநேயருக்கு சாற்றப்படுகிறது.
இந்தாண்டு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே, சுவாமியை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என ஏற்கனவே அறிவித்திருந்தனர். இதனால், கோயில் அலுவலகத்தில் தினமும் ஏராளமான பக்தர்கள் முன்பதிவு செய்து வருகிறார்கள்.