• Mon. May 4th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

குமரியில் வசந்தகுமார் மணிமண்டபம் இன்று திறப்பு!

Vasantha kumar

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்பியும், வசந்த் அன் கோ நிறுவனருமான எச்.வசந்தகுமார் கடந்தஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதி உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவரது உடல் கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் மணிமண்டபம் கட்டப்பட்டு, எச்.வசந்தகுமாரின் உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது.

வசந்தகுமாரின் முதலாம் ஆண்டு நினைவு நாளான இன்று காலை 10.30 மணியளவில் மணிமண்டபம் மற்றும் சிலை திறப்புவிழா நடைபெறுகிறது. தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை வகிக்கிறார், வசந்தகுமாரின் மகனும், கன்னியாகுமரி மக்களவை தொகுதி எம்பியுமான விஜய் வசந்த் வரவேற்கிறார். தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிச் செயலாளர் வல்லபிரசாத் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

எம்எல்ஏக்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார், விஜயதரணி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொள்கின்றனர்.