• Fri. May 8th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

இராஜபாளையம் பகுதிகளில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் SP தனிப்படை நடவடிக்கை

ByKalamegam Viswanathan

Dec 25, 2023

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா கூலிப் போன்ற புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாளுக்கு தகவல் கிடைத்தது

இந்த தகவல் அடிப்படையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தனிப்படை போலீசார் ராஜபாளையம் பகுதியில் பல்வேறு பகுதியில் சோதனையில் ஈடுபட்ட பொழுது ராஜபாளையம் அருகே உள்ள கலங்காபெரி பகுதியில் ஆட்டோவில் சென்று நான்கு பேர் ஒவ்வொரு கடைகளுக்கும் புகையிலை விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது தகவலை தொடர்ந்து போலீசார் அதிரடியாக நடவடிக்கை எடுத்த பொழுது சிவகிரி பகுதியைச் சேர்ந்த தங்கம் சேத்துரைச் சேர்ந்த முருகன் தெற்கு வைத்தியநாதபுரம் பகுதியை சேர்ந்த கார்த்திக் ஆவரம்பட்டி பகுதியைச் பௌர்ணமிசாமி ஆகிய நான்கு பேர் குட்கா விற்பனையில் ஈடுபட்ட பொழுது அவர்களிடமிருந்து 85 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ளான குட்கா பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து அவர்கள் பயன்படுத்திய ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

மேலும் இதே போன்று ராஜபாளையம் இஎஸ்ஐ காலனி அருகே உள்ள மாரிமுத்து என்பவர் டீ கடையில் குட்கா விற்ப்பது தெரிய வந்த நிலையில் குட்கா விற்பனையில் ஈடுபட்ட மாரிமுத்து டீக்கடையில் இருந்து15 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான குட்காவை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் விசாரனையில் தென்காசி மாவட்டத்தில் இருந்துதான் விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிக்குஅரசால் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை வருவதாக கூறினார்கள்..