கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரம் ஏக்நாத் அரங்கில் அனுபவம் மிக்க ஜோதிடர்கள் மற்றும் தற்போது ஜோதிடம் பயின்று வரும் மாணவர்கள் பங்கேற்ற ஜோதிட மாநாடு அஸ்டமங்கல பிரசன்ன சக்கரவர்த்தி முனைவர் கணியர் ஏ.என். ராஜசேகர் தலைமையில் தொடங்கியது.
நிகழ்வில் ஜோதிட மாணவர்களும் பங்கேற்றனர். நிகழ்வில் பங்கேற்ற முதிர்ந்த ஜோதிடர்கள் பேசும் போது, ஜோதிட கலை என்பது பழங்காலத்தில் தந்தை வழியாக புதிய ஜோதிடர்கள் உருவானார்கள். கால மாற்றத்தில் பல தலைமுறைகளில் தந்தை வழி ஜோதிடர்கள் என்ற நிலை மறைந்து ஜோதிடத்தை ஒரு கல்வி போன்று கற்றுத் தேர்ந்த ஆற்றல் மிக்க இளம் ஜோதிடர்கள் இன்று தமிழகத்தில் உருவாக்கியுள்ளார்கள் என்பது, கன்னியாகுமரியில் நடக்கும் மாநாடு ஒரு எடுத்துக் காட்டு என தெரிவித்தார்கள்.
மாநாட்டில் உலக ஷேமத்தை வேண்டி,குரு பெயர்ச்சியை முன்னிட்டு குடும்ப ஷேமத்திற்காகவும்,ஜோதிடர்கள் நலனுக்காகவும், பொதுமக்கள் பயன்பெறவும் யாக வேள்வி நடைபெற்றது.
கணியர் ஏ.என்.ராஜசேகர் செய்தியாளரிடம் இந்த குருபெயர்ச்சி தமிழகத்தில் மீண்டும் மு.க.ஸ்டாலின் தலைமையாலான அரசும், ஒன்றியத்தில் மோடியின் ஆட்சி அமையும் எனவும் தெரிவித்தார்.