• Mon. Nov 17th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல்லில் பிரபல‌ ரவுடி மீது குண்டாஸ்..,

ByS.Ariyanayagam

Oct 15, 2025

திண்டுக்கல், பொன்னுமாந்துறையை சேர்ந்த குருநாதன் மகன் காடு(எ)அன்பழகன் என்பவரை தாலுகா போலீசார் வழிப்பறி வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

காடு(எ) அன்பழகன் மீது கொலை வழக்கு, அடிதடிவழக்கு, கஞ்சா வழக்கு உள்ளிட்ட 7-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் இவரின் குற்ற நடவடிக்கையை ஒடுக்கும் பொருட்டு மாவட்ட S.P.பிரதீப் பரிந்துரையின் பேரில் கலெக்டர் சரவணன் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

இதை தொடர்ந்து தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் காடு (எ) அன்பழகனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.