இரு கிரேன்கள் மூலம் இரும்பு கர்டரை தூண் மீது ஏற்ற முயன்றபோது, எடை தாங்க முடியாமல் ஒருபக்க கிரேன் சரிந்து விழுந்தது. அதைத் தொடர்ந்து மறுபக்கம் இருந்த கிரேனும் சரிந்ததில் அருகே இருந்த வீட்டின் மீது இரும்பு கர்டர் விழுந்தது. இதில் வீட்டின் முன்பக்கம் முழுவதுமாக சேதமடைந்தது.
நல்வாய்ப்பாக இந்த சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. லேசான காயங்களுடன் கிரேன் ஆப்பரேட்டருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.