• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

இ-பாஸ் பெறுவதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் ஓரிரு நாளில் வெளியிடப்படும்

Byவிஷா

Apr 30, 2024

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா தலங்களுக்குச் செல்வதற்கான இனி இ-பாஸ் பெறுவதற்கான வழிநாட்டி நெறிமுறைகள் இன்னும் ஓரிரு நாளில் வெளியிடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கோடைகாலத்தில் வாட்டி வதைக்கும் வெயிலின் தாக்கத்தைப் போக்குவதற்காக, தமிழ்நாட்டின் அனைத்து பகுதி மக்களும் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கும், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கும் கூட்டம் கூட்டமாக படையெடுத்து வரத் தொடங்கியுள்ளனர்.
கோடை விடுமுறையையொட்டி, பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால், இயற்கை எழில் கொஞ்சும் ஊட்டி மற்றும் கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழியத் தொடங்கியுள்ளது. இதுமட்டுமின்றி, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
இதனிடையே, ஊட்டி மற்றும் கொடைக்கானல் பகுதிக்கு செல்ல விரும்புவோர் கட்டாயம் இ-பாஸ் எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்வதற்கான இ-பாஸ் எடுப்பதற்கான நடைமுறைகள் குறித்து தமிழக அரசின் வருவாய்த்துறை, வனத்துறை, சுற்றுலாத்துறை ஆகிய துறைகள் இணைந்து ஆலோசனை கூட்டங்களை நடத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை ஓரிரு நாளில் வெளியிடப்படும் என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
ஒரு நாளைக்கு சுமார் 20 ஆயிரம் வாகனங்கள் ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்வதால், போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஊட்டி, கொடைக்கானலில் வரும் மே 7ம் தேதி முதல் இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.