• Thu. Mar 28th, 2024

ஜி.எஸ்.எல்.வி.எப்-12′ ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது

ByA.Tamilselvan

May 29, 2023

தரைவழி, கடல்வழி, வான்வழி போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பயன்பாட்டுக்காக ஏவப்பட்ட ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
இந்த ராக்கெட் முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாகும். 27.30 மணி நேர கவுன்ட்டவுன் நேற்று தொடங்கியது. இந்த செயற்கைக்கோள் ‘ஜி.எஸ்.எல்.வி.எப்-12’ ராக்கெட் மூலம் இன்று ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து காலை 10.42 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. ‘என்.வி.எஸ்-01’ செயற்கைக்கோள் 2,232 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுட்காலம் 12 ஆண்டுகள். இதில் முதல்முறையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட அணுக் கடிகாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது மற்ற செயற்கைக்கோள்களுடன் சேர்ந்து தரை, கடல், வான்வெளி போக்குவரத்தைக் கண்காணிக்கும். பேரிடர் காலங்களில் துல்லிய தகவல்களைத் தெரிவிக்கும் என்று இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *