இந்திய அஞ்சல் துறை மற்றும் விளையாட்டு ஆணையம் சார்பில் பசுமை இந்தியா மகளிர் சைக்கிள்கள் ஊர்வலம்.
குமரி மாவட்டத்தின் தலை நகர் நாகர்கோவிலில் இந்திய அஞ்சல் துறை மற்றும் விளையாட்டு ஆணையம் சார்பில் Sundays On Cycle என்ற தலைப்பில் இந்திய மக்களிடையே பசுமையான மற்றும் ஆரோக்கியமான இந்தியாவிற்கான உடற்பயிற்சி சூழல் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை பற்றிய விழிப்புணர்வை உருவாக்கும் வகையில் கன்னியாகுமரி கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமாரின் வழிகாட்டுதலின் படி, இன்று சைக்கிள் (மிதிவண்டி) பேரணி நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது. இதனை நாகர்கோவில் முதுநிலை தபால் அதிகாரி சுரேஷ் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில் அஞ்சல் துறை தபால் அதிகாரிகள் பரமேஸ்வரன், ஜாய்ஸ் மற்றும் ஊழியர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.