• Tue. Feb 18th, 2025

காதலனை கொலை செய்த காதலிக்கு மரணதண்டனை

காதலனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த காதலிக்கு நெய்யாற்றன்கரா
நீதிமன்றம் மரணதண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு.

குமரிமாவட்டத்தின் எல்லை பகுதியான களியக்காவிளை பகுதியை சேர்ந்த ஷாரோன்ராஜ், கேரள மாநிலத்தில் எல்லைப்பகுதியான பாறசாலை பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவிக்கு இடையே ஏற்பட்ட காதல், கடைசியாக காதலனுக்கு காதலி விஷம் கொடுத்து கொலை செய்த வழக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக இரண்டு மாநில எல்லையில் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திய வழக்கில், நெய்யாற்றன்கரா கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் காதலனை விஷம் கெடுத்து கொலை செய்த காதலி கிரீஷ்மாவிற்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பு கூறிய நிலையில், இந்த கொலைக்கு உதவியாக இருந்த தாய் சிந்து, தாய்மாமன் நிர்மல் குமாரன் நாயர் ஆகிய இருவரில். தாய் சிந்து விடுதலை செய்யப்பட்டார். மாமா நிர்மல் குமாரன் நாயருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, நீதிபதி தீர்ப்பளித்தார்.

குமரி கல்லூரி மாணவர் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் காதலி கிரிஷ்மாவுக்கு மரண தண்டனை விதித்து கேரளா நீதிமன்றம் தீர்ப்பு
ஷாரோன்ராஜ் கொலை வழக்கில் போலீசார் நேர்மையான முறையில் விசாரணை நடத்தினர்.நீதிமன்றம் பாராட்டு கொலைக்கான தடயங்களை அழித்த கிரீஷ்மாவின் தாய்மாமன் நிர்மல் குமாரனுக்கு 3 ஆண்டு கடும் காவல் தண்டனை விதித்து நெய்யாற்றிங்கரை கூடுதல் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.பஷீர் தீர்ப்பு களியக்காவிளை ஷாரோன்ராஜ் கொலை வழக்கில் கடந்த 18-ம் தேதி தனக்கு 24 வயது ஆனதால் மேலும் படிக்க வேண்டும் எனவும், எனவே மிக குறைந்த தண்டனை வழங்க கிரிஷ்மா நீதிமன்றத்தில் கதறினார். ஆனால் நீதிபதி தனது தீர்ப்பில் மரண படுக்கையிலும் ஷாரோன் கிரிஷ்மாவை உயிருக்குயிராக நேசித்தார் எனவும், கிரிஷ்மா அன்புக்கு துரோகம் இழைத்தார் எனவும், கிரிஷ்மா வயதை காரணம் காட்டி கருணை காட்ட முடியாது எனவும் கொல்லப்பட்ட ஷாரோனும் அதே வயதுடையவர் என நீதிபதி தீர்ப்பில் கூறினார். காதலனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற கொலை குற்றவாளி கிரீஸ்மா சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டார்.