பேரழகனே..,
கணம் கணம் மனதில்
கனம் ஏறுகிறதடா…
உன் பேரழகியின்
காத்திருப்பைக்
கடினமாக்காமல்
விரைவில் வா எந்தன்
கண்ணாளனே!
உடலோடு உயிர்
இருப்பது போல்
என் ஞாபகம்
உன்னுள் இருக்கிறதா..!
பேரழகா நீயே
கதியென்று உன்னையே,
மதியேற்றி தினமும்
காத்திருக்கும் என்னுள்
உன் அபரிமிதமான
நேசத்தை
இதமாய்ப் பொழிய
விரைவில் வா
என் மாயனே..!
என் பேரழகா
எனக்கென
உயிர்பெற்றெழுந்த
பழமுதிர் சோலை நீயடா
ஒய்யாரமாய்ச்
சாய்ந்து
ஓய்வெடுக்கத்
தோள் கொடு தோழனே..!
பூவையைத்
தாங்க வா என்
பூபாளனே!!
ஆதாரத்
திறவுகோலாய்,
மனம் திறக்க வந்திடு!
பத்தும் பறக்கு முன்னால்
பார்க்க வந்திடு!
என் விழித்திரையில் விரதம் முடித்து வைக்க வந்துவிடு என் முன்னாள் விரைவில் முடியும் உன்னால்..!

கவிஞர் மேகலைமணியன்
 
                               
                  












 
              ; ?>)
; ?>)
; ?>)