பேரழகனே..,
என்பேனா எண்ணற்ற
எழுத்துகளை அறிந்திருந்தும்
உன்னை
எழுத அச்சப்படுகிறது
என்பேனா…..?
இல்லை
கலித்தொகை
குறுந்தொகை
எழுதிய புலவரும் கூட
வடிக்கவியலாத கவிதை காவியம் நீ
அப்படியிருக்க நானென்ன எழுத
சிறப்பாய் உன்னை பற்றி
என்பேனா …..?
இல்லை
கூர்மழுங்கியதாய்
உள்ளதே
என்பேனா போல
என்சிந்தையும்
என்பேனா ….?
என் எண்ண அலைகளில் பேரழகா பேரழகா என உருவேற்றி பிதற்றி எழுதும் எழுத்து என்பேனா…. ?

கவிஞர் மேகலைமணியன்