

மதுரையில் நடைபெற்று வரும் கிரேட் இந்தியன் சர்க்கஸ் பள்ளி மாணவர்களின் காலாண்டு விடுமுறையையொட்டி பையர் டான்ஸ் உள்ளிட்ட புதிய சாகசங்கள் அறிமுகம்.
மதுரை ஐயர் பங்களா பகுதியில் காலாண்டு விடுமுறையை ஒட்டி சர்க்கஸ் நடைபெற்று வருகிறது.
பார்வையாளர்களை மிரள வைக்கும் சாகசங்கள் நிறைந்த கரணம் தப்பினால் மரணம் எனும் இந்த சர்க்கஸ் தினசரி மூன்று காட்சிகள் நடத்தப்படுகிறது இதில் 21 நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளது ஒவ்வொரு நிகழ்வும் பார்வையாளர்களை மெய் சிலிர்க்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது.
எனினும் இந்த தொழிலைச் சார்ந்து பலஆயிரத்துக்கும் மேற்பட்ட கலைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர் இந்த தொழிலை மீட்டெடுக்கவும் தொழிலாளர்களை காப்பாற்றவும் மற்ற மாநிலங்களில் இட வாடகையில் சலுகைகள் வழங்குவது போல் தமிழக அரசிசும் சலுகைகள் வழங்க வேண்டும் மத்திய அரசு எடுத்துச் சென்ற மிருகங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் மேலும் இந்த கலைஞர்களுக்கு மானியமும் வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
சர்க்கஸ் தொழில் இந்தியா முழுவதும் பரவலாக 72 நிறுவனங்கள் நடத்தி வந்த நிலையில் கொரோனாவுக்கு பின் 52நிறுவனங்களாக குறைந்துள்ளது குறிப்பிட தக்கது.

