• Mon. May 20th, 2024

தேவேந்திர குல வேளாளர்கள் பட்டியல் மாற்றம் அடைந்திடுவோம், பொது பிரிவில் சேர்ந்திடுவோம் என, மள்ளர் சேனைதலைவர் சோலை பழனிவேல் ராசன் மதுரையில் பேட்டி…

Byகுமார்

Sep 28, 2023

மதுரையில் மகபூப்பாளையம் பகுதியில்அமைந்துள்ள தனியார் அரங்கத்தில் மள்ளர்சேனைநிர்வாகிகள் கூட்டாக செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் மள்ளர் சேனை தலைவர் சோலை பழனிவேல்ராசன் செய்தியாளர்களிடம் கூறியது, ஏழு உட்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அறிவித்த மத்திய அரசுக்கு நன்றி பெயர் மாற்றத்திற்கு உறுதுணையாக இருந்த அப்போதைய அதிமுக தமிழக அரசுக்கு நன்றி எனவும், இரண்டு கோடி தேவேந்திரகுல வேளாளர்கள்களின் ஒன்றுபட்ட கோரிக்கை பட்டியல் மாற்றம் வேண்டும். தேவேந்திர குல வேளாளர்கள்1936 வரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்தோம் ஆனால் திட்டமிட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சி சூழ்ச்சியினால் நாங்கள் தலித்துகளாகவும் ஆதிதிராவிடர்களாகவும் நசுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டோம். வேளாண் குடி மக்களாக இருந்து வேளாண்மை மட்டும் தொழிலாக இருந்தது. அதனால் தேவேந்திர குல வேளாளர் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தோம். மத்திய அரசு தேவேந்திர குல வேளாளர்கள் என அறிவித்தது. தற்போது எங்களது கோரிக்கை பட்டியல் பிரிவிலிருந்து நாங்கள் மாற்றம் அடைய வேண்டும். எங்களை பொது பிரிவில் சேர்க்க வேண்டும். அங்கு எங்களுக்கு உள் ஒதுக்கீடு 10% கேட்கிறோம். இதுதான் எங்க மக்களுடைய நீண்ட நாள் கோரிக்கை. இதனை மத்திய மாநில அரசுகள் செய்து கொடுக்க வேண்டும் இதற்கு மாநில அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆனால் தேவேந்திரகுல வேளாளர்களின் கோப்புகளை தமிழக முதல்வர்க்கு இரண்டு முறை அனுப்பியும் முதல்வர் மேஜையில் கோப்புகள் தூங்கிக் கொண்டிருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது. பாரபட்சம் இல்லாமல் அனைத்து சமுதாயத்திற்கும் எவ்வாறு செய்தீர்கள் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மணிமண்டபம் பேனா சிலை, நூலகம் அமைக்கிறீர்கள் இதை எந்த சமுதாயமும் கேள்வி கேட்கவில்லை அந்த அதிகாரத்தை மீட்ப்பதற்காக அரசியல் பரவலாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை அடிப்படையில் மள்ளர் சேனை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. எனவே கோரிக்கை மனுவை மத்திய அரசுக்கு தாமதப்படுத்தாமல் செயல்படுத்த வேண்டும். தூங்குகின்ற திராவிட மாடல் அரசை கண்டிக்கிற வகையில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய உள்ளோம் எனக் கூறினார் டெல்லியை சேர்ந்த வழக்கறிஞர் வேதா மற்றும் மள்ளர் சேனை தலைமை மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜாதேவேந்திரன் மாவட்ட செயலாளர் பங்க்மணிபாண்டியன் நகர் மாவட்ட செயலாளர் கிஷோர்மள்ளர், மாநில துணை கொள்கை பரப்புச் செயலாளர் முத்தையா உசிலம்பட்டி தொகுதி செயலாளர் காசிமாயத்தேவேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *