• Sat. May 9th, 2026
WhatsAppImage2026-05-08at053925
previous arrow
next arrow
Read Now

மதுரையில் கார் மோதிய விபத்தில் பாட்டியும்,பேரனும் பலி

ByKalamegam Viswanathan

Feb 19, 2023

மதுரையில் அதிவேகமாக வந்த கார் மோதிய விபத்தில் பாட்டியும் மற்றும் பேரனும் சம்பவ இடத்திலேயே பலி; போலீசார் விசாரணை.
மதுரை ஆரப்பாளையம் அருகே உள்ள புட்டு தோப்பு பகுதியில் அதி வேகமாக சென்ற நான்கு சக்கர வாகனம் அடுத்தடுத்து நான்கு பேரை மோதி விபத்திற்குள்ளானது. இதில் அவ்வழியாக நடந்து சென்று கொண்டிருந்த கருப்பையா தோப்பு பகுதியை சேர்ந்த சுப்பு லட்சுமி,(வயது 60) மற்றும் அவரது பேரன் தானு ஆகாஷ்,(வயது 13) ஆகியோரின் மீது தறிகெட்டு நிலையில் வேகமாக வந்த கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மற்ற இருவர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர், மேலும் விபத்தில் பலியான சுப்புலட்சுமி மற்றும் தாணு ஆகாஷ் ஆகியோரது உடலை கரிமேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.