புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே செங்கமேடு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த கிராமத்தில் இன்று ஊராட்சி மன்ற கட்டடத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

இந்த கிராம சபை கூட்டம் குறித்து அப்பகுதி பொதுமக்களுக்கு எந்த ஒரு முன் அறிவிப்பும் இல்லாமல் 100 நாள் பணியாளர்களை வைத்து கிராமசபை கூட்டம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த தகவல் அறிந்த அப்பகுதியை சேர்ந்த கிராம பொது மக்களில் ஒருவரான முத்துச்சாமி என்பவர் செங்கமேடு ஊராட்சியில் பணிபுரியும் முருகேசன் என்ற கிளார்கிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது இந்த ஒருமுறை தெரியாமல் நடந்து விட்டது.

இனிமேல் இந்த தவறு நடக்காது என்று கூறும் ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிராம மக்களுக்கு தெரியாமல் 100 நாள் பணியாளர்களை வைத்து கிராமசபை கூட்டம் நடத்திய அரசு அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.













; ?>)
; ?>)
; ?>)