• Fri. Nov 14th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

சைன் லையன்ஸ் சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்..,

ByS. SRIDHAR

Nov 1, 2025

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கொப்பனாபட்டி கலைமகள் கல்லூரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கொப்பனாபட்டி ஷைன் லயன்ஸ் சங்கம், புதுக்கோட்டை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

இதில் கண்புரை நோய்,கிட்ட பார்வை, தூர பார்வை உள்ளிட்ட பல்வேறு கண் குறைபாடுகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டு மேல் சிகிச்சை மற்றும் கண் அறுவை சிகிச்சைக்கு பயனாளிகள் மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.மேலும் இதில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனர். இந்நிகழ்விற்கு ஷைன் லயன்ஸ் சங்கத்தின் தலைவர் ராமநாதன் தலைமை வகித்தார். சங்கத்தின் செயலாளர் ஜெயசூர்யா,பொருளாளர் குமார் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.நிகழ்வை விவேகானந்தன் ஒருங்கிணைத்தார்.