



நாகை அடுத்த நாகூரில் பிரமாண்டமாக நடைபெற்ற மழலைகள் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. ஒன்றாம் வகுப்பில் அடியெடுத்து வைக்கும் மகிழ்ச்சியில் அங்கி உடை அணிந்து பள்ளிக் குழந்தைகள் உற்சாக நடனமாடினர்.
பட்டமளிப்பு விழா, பட்டம் பெறுதல், குழந்தைகள் நடனம் நாகை அடுத்த நாகூர் கிரசண்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மழலையர்களுக்கான பட்டமளிப்பு விழா பிரமாண்டமாக இன்று நடைபெற்றது. பள்ளி தாளாளர் மரியம் ஹபீத் தலைமையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், பள்ளி முதல்வர் ராபியத்துல் பஜிரியா, துணை முதல்வர் சியாமளா ஆகியோர் மேல் மழலையர் வகுப்பை முடித்து ஒன்றாம் வகுப்பு செல்லும் குழந்தைகளுக்கு பட்டங்களை வழங்கி கௌரவித்தார்கள்.


அப்போது குழந்தைகள் அங்கி உடை அணிந்து, தலையில் தொப்பி அணிந்து மகிழ்ச்சியோடு பட்டங்களை பெற்று சென்றனர். முன்னதாக மேல் மழலையர் குழந்தைகள் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக பேருந்து மூலம் அழைத்து வந்ததை பெற்றோர்கள் மகிழ்ச்சியோடு கண்டு ரசித்து பெருமிதம் அடைந்தனர்.

தொடர்ந்து உறுதிமொழி ஏற்று ஒன்றாம் வகுப்பிற்கு செல்லும் மகிழ்ச்சியோடு UKG குழந்தைகள் அங்கி உடை அணிந்து தங்களுக்கான மழலை மொழியில் நடனமாடியது அனைவரையும் கவர்ந்தது.

