• Fri. Apr 18th, 2025

சமரச மையம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி..,

ByR. Vijay

Apr 10, 2025

நாகையில் சமரச நாள் விழாவை முன்னிட்டு சமரச நீதிமன்றம் சார்பில் நாகப்பட்டினத்தில்ல பொது மக்களிடையே சமரச மையம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நீதிபதிகள் நடத்தினர். நீதிமன்றங்களில் செயல்படும் சமரச நீதிமன்றங்கள் வாயிலாக நீண்ட நாட்கள் நிலுவையில் உள்ள வழக்குகள் சமரசம் மூலம் தீர்க்கப்படுகின்றது.

இவ்வாறு நீதிமன்றங்களில் செயல்படும் சமரச நீதிமன்றங்கள் குறித்த விழிப்புணர்வு நாகப்பட்டினம் புதிய பஸ்ஸ்டாண்டில் நடத்தப்பட்டது. அப்போது சமரசம் நாடுவீர் என்ற சமரசம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசங்கங்களை நீதிபதிகள் பொதுமக்களிடம் வழங்கினர்.

இந்த சமரச மையம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட நீதிபதி கந்தகுமார், போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி கார்த்திகா, சார்பு நீதிமன்ற நீதிபதிகள் சீனிவாசன், மோகனப்பிரியா, நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதிகள் தினேஷ்குமார், ஐஸ்வர்யா, மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ராமச்சந்திரன் மற்றும் வழக்கறிஞர், நீதிமன்ற ஊழியர்கள் கலந்துகொண்டனர்.