பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைக்க 4நாட்கள் பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை செல்கிறார்.
கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் தி.மு.க. கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மு.க.ஸ்டாலின் 4 நாள் சுற்றுப்பயணமாக இன்று கொங்கு மண்டலத்திற்கு வருகிறார். (புதன்கிழமை) காலை 10 மணிக்கு கோவையை அடுத்த ஈச்சனாரியில் அரசு சார்பில் நடக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்கிறார். விழாவில் 1 லட்சத்து 7 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். இதுதவிர பல்வேறு அரசு துறைகள் சார்பில் நிறைவேற்றப்பட்டுள்ள பல்வேறு முடிவுற்ற திட்டப் பணிகளையும் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கிறார். மேலும் பல்வேறு அரசு துறைகளின் சார்பில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டி விழா பேரூரையாற்றுகிறார். முதல்-அமைச்சர் வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. . நாளை விழா நடக்கும் பகுதிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.