• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

இபிஎஸ் மேல்முறையீடு மனு இன்று விசாரணை..

Byகாயத்ரி

Aug 23, 2022

அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் தனித்தனியாக பொதுக்குழு, செயற்குழு கூட்டங்களை கூட்டக் கூடாது. இருவரும் ஒன்றாகத்தான் கூட்டவேண்டும். பொதுக்குழுவை கூட்டுவதற்கு 30 நாட்களுக்கு முன் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. பொதுக்குழு செல்லாது என உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இபிஎஸ் மேல்முறையீடு செய்திருந்தார். நேற்று இது விசாரணைக்கு வரும் என்று கூறப்பட்ட நிலையில் மேல்முறையீட்டு மனுவை தனி நீதிபதி உத்தரவின் சான்று அளிக்கப்பட்ட நகல் இல்லாமல் பட்டியலிடும்படி இபிஎஸ் கூடுதல் மனு தாக்கல் செய்தார். இதனால் இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெறுகிறது.