• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

இந்த அரசு அதானிக்கான அரசு – மாணிக்கம் தாகூர் எம்பி பேட்டி

ByKalamegam Viswanathan

Feb 15, 2023

ஒன்றிய அரசு100 நாள் வேலை திட்டத்தின் நிதியை குறைப்பதும் அதானிக்கு சலுகை அளிப்பதும் இந்த அரசாங்கத்தின் இரண்டு பார்வையாக இருக்கிறது. இந்த அரசு அதானிக்கான அரசாக இருக்கிறதே தவிர சாமானிய மக்களின் அரசாக இல்லை என்பதற்கு எடுத்துக்காட்டு இது. -எம்பி மாணிக்கம் தாகூர் பேட்டி
மதுரை தனக்கன்குளத்தை அடுத்த வேடர் புளியங்குளம் பகுதியில் 100 நாள் வேலை திட்டத்தை ஆய்வு செய்த விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் அங்கிருந்த தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கூறுகையில்:
திருப்பரங்குன்றம் ரயில்வே பாதை குறித்த கேள்விக்கு:
தமிழகத்திற்கான ரயில்வே திட்டங்களை தொடர்ந்து மத்திய அரசு புறக்கணித்து வருகிறது. ரயில் நிற்பதாக இருந்தாலும், ரயில் திட்டங்களாக இருந்தாலும் மோடி அரசு விருதுநகர் தொகுதியை வஞ்சிக்கிறது.


100 நாள் வேலை திட்டம் நிதி குறைப்பு குறித்த கேள்விக்கு:
நடப்பு பட்ஜெட்டில் 100 நாள் வேலை திட்டத்தில் நிதி மிகப் பெரிய அளவில் குறைக்கப்பட்டுள்ளது. இந்த குறைப்பு சாமானிய மக்களை மிகப்பெரிய அளவில் பாதிக்கும். பல கிராம மக்களுக்கு இது வாழ்வாதாரமாக இருந்து வருகிறது.
இந்த திட்டத்தின் நிதியை குறைப்பதும் அதானிக்கு சலுகை அளிப்பதும் இந்த அரசாங்கத்தின் இரண்டு பார்வையாக இருக்கிறது. இந்த அரசு அதானிக்கான அரசாக இருக்கிறதே தவிர சாமானிய மக்களின் அரசாக இல்லை என்பதற்கு எடுத்துக்காட்டு இது.
திமுக , காங்கிரஸ் கூட்டணி குறித்து மோடி கூறியதும் மற்றும் மோடியிடம் கேட்ட இந்த கேள்விகள் குறித்த கேள்விக்கு:
பாஜக ஆட்சியை கலைத்த அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கிறார்கள். முதலில் அவர்கள் அதற்கு பதில் சொல்ல வேண்டும். ஐந்து கேள்விகள் என்பது அதானியுடன் மோடி எத்தனை வெளிநாட்டு பயணங்கள் சென்றுள்ளார், எத்தனை இடங்களில் அதானிக்கான ஒப்பந்தங்களை பெற்று தந்தார், மோடி இல்லாமல் எத்தனை நாடுகளுக்கு அதானி தனியாக சென்று ஒப்பந்தங்களை பெற்றுள்ளார், கடந்த இரண்டு பொது தேர்தல்களில் பாஜகவிற்கு அதானி எவ்வளவு நிதி கொடுத்துள்ளார் இன்று கேள்வி எழுப்பி பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளேன் அதற்கு அவர் பதில் அளிப்பார் என்று நம்புகிறேன்.
வாரணாசி விமான நிலையத்தில் ராகுல் காந்தியின் விமானம் தரையிறக்க அனுமதி மறுக்கப்பட்டது குறித்த கேள்விக்கு:
மோடியின் தொகுதியில் இருப்பதால் வாரணாசி விமானநிலையத்திற்கு பல முன்னேற்ற திட்டங்களை மோடி அரசு செய்தது. ஆனால் அங்கு ராகுல் காந்தி சென்ற விமானம் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்ட செய்தி மிகவும் வருத்தத்திற்குரியது. காழ்ப்புணர்ச்சியோடு மோடி அரசு செயல்படும் என்றால் மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என மாணிக்கம் தாகூர் கூறினார்.