

திமுக மற்றும் பாஜக இடையே அரசியல் கருத்து வேறுபாடு அதிகரித்து வரும் சூழலில் மதுரை மாவட்டத்தில் திமுக பாஜகவினரிடையே போஸ்டர் யுத்தம் தொடங்கியுள்ளது.

அந்த வகையில் ஆளுநர் விவகாரத்தில் இரு தினங்களுக்கு முன்பு நீதிமன்ற தீர்ப்பு வந்ததன் அடிப்படையில் மதுரை திருப்பரங்குன்றம் பகுதிகளில் ஆளுநர் குறித்து திமுகவினர் ஒட்டி உள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் தமிழ்நாடு போராடும்; தமிழ்நாடு வெல்லும். ஆளுநரே தமிழ்நாட்டை விட்டு வெளியேறு என்கிற வாசகங்கள் இடம் பெற்றுள்ளது.

நேற்று திமுக குறித்து பாஜகவினர் இதேபோல போஸ்டர் ஒட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆளுநர் பதவியின் அதிகாரம் குறித்து உச்ச நீதி மன்றம் அளித்த தீர்ப்பின் படி மதுரை தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் விமல் ஆளுநரை தமிழ்நாட்டை விட்டு வெளியேறு என ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

