


பணி நிரந்தரம் காலம் முறை ஊதியம் பணியாளர்களுக்கு முறையான நிலையான அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் போன்ற பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றி தர வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு நடைபெற்றது.

மதுரை மாவட்டம் சார்பாக மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு மாநில பொதுச் செயலாளர் பாலமுருகன் தலைமையில் மாநில துணைத்தலைவர் ராமர் பொதுச் செயலாளர் பாண்டியன் துணைச் செயலாளர் ராஜா திருமாறன் உட்பட டாஸ்மார்க் விற்பனையாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் முன்னிலையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


