



மதுரையில் தர்பூசணி பரோட்டா விற்பனை செய்யப்பட்டது. மதுரை டெம்பிள் சிட்டி உணவக வீடியோ விளம்பரத்தால் சர்ச்சைக்குள்ளாகியது. உணவு பாதுகாப்புத்துறை அனுமதியுடன் புதிய வகை உணவுகளை வாடிக்கையாளர்களுக்கு அனுமதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.
மதுரையில் பிரபல உணவகமான டெம்பிள் சிட்டி உணவகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக நித்தியானந்தா கைலாச நாடு என அறிவித்த நிலையில். கைலாச நாட்டில் தனது உணவகத்தை அறிமுகம் செய்ய அனுமதி வேண்டி கடிதம் எழுதி பரபரப்புக்குள்ளாக்கியவர் டெம்பிள் சிட்டி குமார்.


இந்நிலையில், அவ்வப்போது முக கவசம் போன்ற வடிவில் புரோட்டா உருவாக்குவது என வித்தியாசமான முறையில் உணவகத்திற்கு வருபவர்களை ஈர்ப்பதற்காக சமூக வலைதளங்கள் மூலமாக விளம்பரம் செய்து வரும் டெம்பிள் சிட்டி உணவாகமானது தற்போது தமிழக முழுவதிலும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கக்கூடிய தர்பூசணி விவகாரத்தில், மேலும் ஒரு விவாதத்திற்குரிய விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் டெம்பிள் சிட்டி உணவகத்தின் சார்பில் வெயிலுக்கு அறிமுகம். அடிக்கிற வெயிலுக்கு ஆனந்தமாய் சுவைத்திட குளு, குளு தர்பூசணி பரோட்டா என்ற வாசகத்துடன் கூடிய விளம்பரம் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

இதற்கு அவரது ஆதரவாளர்கள் சிலர் சூப்பர் அண்ணா ஆகா, ஓகோ அருமை அண்ணா உங்களுக்கு இப்படியெல்லாம் எப்படி ஐடியா தோன்றுகிறது என ஹோட்டல் உரிமையாளர் குஷிப்படுத்தி ஆடியோ வெளியிட்டு வருகின்றனர்.
இந்த வீடியோ வெளியான நிலையில், தர்பூசணி பழத்தின் மேல் எண்ணையை ஊற்றி புதிய விதமான தயாரிப்பு என கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஏராளமான வாடிக்கையாளர்கள் வரக்கூடிய இது போன்ற உணவகங்களில் வாடிக்கையாளர்களை சோதனை எலி போல மாற்றுவது ஏன் எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
மதுரையில் பிரபல உணவகமான டெம்பிள் சிட்டி உணவகத்தில் திடீரென தர்பூசணி புரோட்டா என அறிமுகப்படுத்தப்பட்டு, அந்த வீடியோவில் தர்பூசணி பழத்தை புரோட்டா மாவின் மீது வைத்து, அதன் மீது எண்ணெய் ஊற்றி அதனை பொறித்து பீட்சா போல கட் பண்ணி கொடுப்பது போன்ற வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது போன்று இயற்கையாக உண்ணக்கூடிய உணவுகளை அடுப்பில் வேக வைத்து, பரோட்டாவுடன் உண்பது உடலுக்கு உபாதை ஏதும் ஏற்படுத்திவிடும் என்ற அச்சத்தோடு வாடிக்கையாளர்கள் இருந்து வருகின்றனர்.

