• Sun. Jun 21st, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

இந்தியா புக் ஆப் ரெக்கார்ட் சாதனை முயற்சியில் ஈடுபட்ட அரசு பள்ளி மாணவிகள்..,

ByK Kaliraj

Jun 12, 2026

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே N.சுப்பையாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவிகள் யாசினி பவித்ரா சாருமதி மதுஸ்ரீ அதேபோல் 9ஆம் வகுப்பு மாணவிகள் மதுஷா மாதவி மற்றும் பத்தாம் வகுப்பு மாணவியான ஸ்ரீ வர்ஷினி ஆகிய ஏழு மாணவிகள் திருக்குறளை கடந்த இரண்டு ஆண்டுகளாக பயின்று வருகின்றனர்.

இந்த மாணவிகள் திருக்குறளின் மூலம் சாதனை படைக்க விரும்பி உலக திருக்குறள் முற்றோதல் இயக்கம் சார்பில் 1330 வது திருக்குறளிலிருந்து ஒன்றாவது திருக்குறள் வரை எழுதி சாதனை படைக்கும் முயற்சியை இன்று காலை 8 மணி அளவில் சுப்பையாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் துவங்கினர். தொடர்ந்து 15 மணி நேரம் நடைபெறும். இந்த உலக சாதனை முயற்சியில் இந்த ஏழு அரசு பள்ளி மாணவிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த அரசு பள்ளி மாணவிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து பல்வேறு பயிற்சிகள் பெற்று வரும் நிலையில் இன்று இந்த சாதனை முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சாதனை முயற்சியை புதுச்சேரியைச் சார்ந்த ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தினர் கண்காணித்து வருகின்றனர். மேலும் இந்த சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ள மாணவிகளை பாராட்டி தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வாழ்த்து மடல் எழுதி அனுப்பியுள்ளார்.

மேலும் இந்த சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ள மாணவிகளின் சாதனை முயற்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் சுகபுத்ரா மற்றும் கல்வித்துறை அலுவலர்கள் பார்வையிட்டு மாணவிகளை ஊக்கப்படுத்தினர். மேலும் சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ள மாணவிகளின் பெற்றோர்கள் அங்கு அமர்ந்து மாணவிகளை உற்சாகப்படுத்தி வருகின்றனர். தொடர்ந்து 15 மணி நேரம் நடைபெறும் இந்த சாதனை முயற்சி நடைபெற்றது.